பறை
-----
கலையை கலைஞனை
போற்றிய நாடிது என்கிறாய்...
காலம் காலமாய்
பறையை பறயனை தாழ்த்திய
நீ.
கலைஞன்
---------
கலைஞன்
வாயிலிருந்து
நாகஸ்வரத்தில்
பாய்ந்தது
எச்சில்
நாகஸ்வரத்திலிருந்து
ரசிகன் காதில்
பாய்ந்தது
தேன்!
மண்
----
மண்ணில் உழவன் வாழ்க்கை
அறுவடைக்கு முன்
உழவன் வாழ்க்கையில் மண்
அறுவடைக்குப் பின்
இயக்கம்
--------
வைக்காதே சிலை தொழிலாளிக்கு
எங்கும் செயலற்று நின்றதில்லை இவன்
குடுகுடு
-------
நல்லகாலம் வருகுது
நல்லகாலம் வருகுது..
தெருவிலேயே நிற்கிறான்
குடுகுடுப்பைக்காரன்.
வீரம்
----
உன் கனவில் பாம்பு துரத்துகிறது
நீ ஓடுகிறாய்
குறவன் அவன் துரத்துகிறான்
பாம்பு ஓடுகிறது
வீரம் தொழிலாழிக்கு
குமுறல்
-------
செருப்பு
ஆண்டநாள் அது
என்கிறாய்..
சொல்
செருப்பை செய்தவன்
ஆளும் நாள் எது ?
.
No comments:
Post a Comment